திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய சரகத்தில், (27.12.2025) அன்று காக்கநல்லூர் ஊரைச் சேர்ந்த மாரியப்பன் (46). என்பவர் கொலையுண்டு கிடப்பதாக தகவல் கிடைக்க பெற்று, வி.கே.புரம் காவல்துறையினர் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனர். கொலைக்கான காரணத்தினை விரைவில் கண்டறிந்து, குற்றவாளியை கைது செய்ய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப, உத்திரவிட்டதன் பேரில், அம்பாசமுத்திரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ்குமார், காவல் ஆய்வாளர், சுப்பிரமணியன் தலைமையில் தீவிரமாக விசாரணை நடத்தி
இக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அருண் பாண்டி(19) என்ற வாலிபரை கைது செய்ததுடன் இதில் தொடர்புடைய 3 இளவர்கள் காவல்துறையால் கையகப்படுத்தப்பட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணையில் முன்விரோதம் காரணமாக மாரியப்பன் கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. இச்சம்பவம் நியூஸ் ஜெ தொலைக் காட்சியில், திருநெல்வேலி மாவட்டம், அம்பை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒருவரை 4 பேர் கொண்ட கூலிப்படையினர் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓட்டம் என தவறான செய்தியாக ஒளிபரப்பாகியுள்ளது. தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் முழுமையாக விசாரிக்காமல் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதால் பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தும். இது போன்று ஆதாரம் அற்ற தகவல்களை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்பாடுகள் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்ன மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















