செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் நியாயவிலை கடையில் செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு வங்கி துணைப் பதிவாளர் திருமதி. உமா சங்கரி அவர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, நியாயவிலை கடையின் செயல்பாடுகள், அத்தியாவசிய பொருட்களின் இருப்பு, விநியோக முறை உள்ளிட்டவற்றை அவர் பரிசோதித்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினையும் வழங்கினார். இந்த நிகழ்வின்போது கூட்டுறவு வங்கி செயலாளர் திரு. இளம் பரிதி மற்றும் நியாயவிலை கடை விற்பனையாளர் திரு. வேதகிரி ஆகியோர் உடனிருந்தனர். ஆய்வின் போது நியாயவிலை கடைகள் பொதுமக்களுக்கு நேர்மையான மற்றும் துரிதமான சேவையை வழங்க வேண்டும் என துணைப் பதிவாளர் அறிவுறுத்தினார்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்
















