திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் தெற்கு புறவழிசலையில், பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்த மாரியப்பன் (34). என்பவர் சதீஷ் பாலாஜி சிட்பண்ட் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். (16.12.2024) அன்று அடையாளம் தெரியாத நபர்கள் நிறுவனத்தின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பணம் ரூ 70,860/- , கண்காணிப்பு கேமரா, Hard Disk மற்றும் DVR ஆகியவற்றை திருடிச் சென்று விட்டதாக மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பாளையங்கோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்