திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், ஊரல்வாய்மொழியை சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் ராஜன் (44).என்பவர் கூடங்குளத்தில் உள்ள தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று பணியில் இருக்கும் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக சக பணியாளர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து, கூடங்குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இது சம்பந்தமாக இறந்து போன ராஜனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு (30.08.2025) அன்று வந்துள்ளனர். இறப்பு சம்பந்தமாக காவல்துறையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் விரிவாக விளக்கப்பட்டது. மற்றபடி தினசரி செய்தித் தாள்களில் வெளியிட்டபடி, காவல் நிலையத்தில் முற்றுகையோ, தர்ணா போன்றோ எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை. இது போன்ற செய்திகள் வெளியிடும் போது உண்மை நிலையினை விசாரிக்காமல், தகவல்கள் வெளியிடுவது பொதுமக்களிடையே, தேவையற்ற குழப்பத்தினை உருவாக்கும் என்பதால் செய்திகளை பொறுப்பாக வெளியிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்