திருநெல்வேலி: ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய சம்பவத்தை அடுத்து, திருநெல்வேலி சரகத்துக்குள்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றி திருநெல்வேலி மாநகர ஆணையரும், சரக டி.ஐ.ஜி.யுமான (பொறுப்பு) சந்தோஷ் ஹாதிமானி, இ.கா.ப., கூறியதாவது. திருநெல்வேலி சரகத்திற்கு உட்பட்ட நான்கு மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில், காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகப்படும் நபர்களின் நடமாட்டத்தையும் தீவிரமாக கவனித்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. சந்தேகப்படும் நபர்கள் அல்லது மா்ம பொருள்கள் குறித்து ஏதேனும் மக்களுக்கு தெரியவந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறை தொடர்ந்து தீவிரமாக செயல்படும் என தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்