திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான புகையிலை பொருட்களை விற்பனை செய்தும், பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த பிரேம்சிங் என்பவரது மகனான பரத்சிங்(45). யூடாராம், மகனான ஓம் பிரகாஷ்(27). பாரஸ்மால், மகனான தீபக்குமார்(24). பீமாராம், மகனான சந்தீப்குமார்(27). ஆகியோர் மீது திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், மேற்கு, V.கீதா, காவல் உதவி ஆணையர், வெங்கடேசன், தச்சநல்லூர் காவல் ஆய்வாளர், முத்துகணேஷ் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., ஆணைப்படி (08.09.2024)-ஆம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்