மதுரை: மதுரை மாவட்ட போலீஸ் எஸ்பி சுஜித்குமார், மதுரை நகர துணை ஆணையாளர் சிவபிரசாத் மேற்பார்வையில் போலீஸார், சாலையில் வந்த வாகனங்களை நிறுத்தி விசாரித்தனர். தகுந்த காரணமில்லாமல் வந்த வாகனங்களை போலீஸார் திருப்பி விட்டனர்.
கடைகளை அனைத்தும் மூடப்பட்டிருந்தன. விவசாயப் பணிக்கு செல்வோர் சிலர் சைக்கிளில் செல்வதை காணமுடிந்தது. நடமாடும் காய்கறி வண்டிகள் மூலம் காய்கறி விற்பனைகள் செய்யப்பட்டன.