கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், வனச்சரகத்துக்கு உட்பட்ட கல்லாவி, ஊத்தங்ககரை வனப்பகுதிகளில் வனவர் சுபாஷ் தலைமையில் குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லாவி பிரிவு சாலையில் உள்ள நொச்சிப்பட்டி பீட் பொம்பட்டி மாட்டு வழி சரகத்தில் வனவிலங்குகளை வேட்டையாடும் 2 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் போச்சம்பள்ளியை அடுத்த வாலிப்பட்டியை சேர்ந்த கதிர்வேல் (26). வினோத் (20). என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 32 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிர்வேல், வினோத் ஆகிய இருவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்