கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது திம்மனட்டி கிராமத்தில் உரிமம் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் குற்றவாளியின் வீட்டின் பின்புறம் சென்று சோதனை செய்தபோது அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி-01, நாட்டுத் துப்பாக்கியின் கட்டை-01, நாட்டுத் துப்பாக்கி பேரல்-02 வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















