கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய பகுதியில் தளி வனச்சரக அலுவலர் சரவணன் விவேக் என்பவருக்கு மாடக்கல் கிராமத்தில் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தளி போலீசாருக்கும் தகவல் தெரிவித்து போலீசாருடன் (01.09.2025) ஆம் தேதி 12.30 மணிக்கு மாடக்கல் கிராமத்தில் உள்ள எதிரி வீட்டின் அருகில் கண்காணித்துக் கொண்டு செல்லும் போது குற்றவாளி போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றவரை பிடித்து விசாரித்த போது தனது வீட்டிற்கு அருகிலுள்ள முட்புதரில் எவ்வித அரசு அனுமதியும் உரிமமும் இல்லாமல் காட்டுப் பகுதியில் கிடைத்த நாட்டு துப்பாக்கியை கள்ளத்தானமாக மறைத்து வைத்திருப்பதை ஒப்புக்கொண்டார். அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவரை கைது செய்து அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்து தளி காவல் நிலையம் ஆஜராகி சரவண விவேக் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.