கிருஷ்ணகிரி: அஞ்செட்டி காவல் நிலைய பகுதியில் அஞ்செட்டி மேற்கு கிராம நிர்வாக அலுவலர் ஜார்ஜ் என்பவருக்கு வண்ணாத்திப்பட்டி கிராமத்தில் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அஞ்செட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்து போலீசாருடன் (20.05.2025) ஆம் தேதி 10.00 மணிக்கு வண்ணாத்திப்பட்டி கிராமத்தில் உள்ள குற்றவாளி வீட்டின் அருகில் கண்காணித்துக் கொண்டு செல்லும்போது குற்றவாளி போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றவரை பிடித்து விசாரித்த போது தனது வீட்டிற்கு அருகிலுள்ள முட்புதரில் எவ்வித அரசு அனுமதியும் உரிமமும் இல்லாமல் காட்டுப் பகுதியில் கிடைத்த இரண்டு நாட்டு துப்பாக்கிகளை கள்ளத்தானமாக மறைத்து வைத்திருப்பதை ஒப்புக்கொண்டார், அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவரை கைது செய்து அவரிடமிருந்து இரண்டு நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்து அஞ்செட்டி காவல் நிலையம் ஆஜராகி ஜார்ஜ் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்