நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவர்களை எச்சரிக்கும் விதமாகவும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஹர்ஷ் சிங் இ. கா.ப ., அவர்களின் தலைமையில் நாகை மாவட்ட காவல்துறையினர் மற்றும் ஒடிசா மாநில காவல் துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு நடைப்பெற்றது. இக்கொடி அணிவகுப்பானது நாகை (அவுரி திடல்) புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி முக்கிய பகுதிகளான LIC வழியாக சென்று நாகை அபிராமி அம்மன் திடல் அருகே நிறைவுபெற்றது. அதேபோல் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில், வேளாங்கண்ணி புதிய பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட கொடி அணிவகுப்பு ஊர்வலமானது, வேளாங்கண்ணி எம், ஜி, எம் லாட்ஜில் முடிவடைந்தது. மேலும் இவ்வனி வகுப்பில் ஒடிசா காவல்துறையினர், நாகை மாவட்ட தாலுகா காவல்துறையினர், மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், என சுமார் 300 காவல்துறையினர் கலந்து கொண்டனர்.