திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் ஜெஸி மேனகா தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் இருந்த போது, இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் திமையார்புரத்தை சேர்ந்த ஜார்ஜ் துரை (30). என்பவரை நிறுத்தி சோதனை செய்து பார்த்தபோது, கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து, நாங்குநேரி காவல் ஆய்வாளர், சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து ஜார்ஜ் துரையை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.















