மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள்.
மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், ஒத்தக்கடை காவல் நிலையத்திறகு உட்பட்ட இராஜகம்பீரம் மீனாட்சி நகர் ஸ்ரீ தண்டினி (எ) ஆனந்த வராஹி அம்மன் கோவிலில் உதவியாளராக பணிபுரிந்து வரும் ரவிசந்திரன் என்பவரது புகாரின் அடிப்படையில் ஒத்தக்கடை காவல் நிலைய குற்ற எண் 671/15, பிரிவு 394 r/w 397 & 302 இ.த.ச வின் படி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்க இயலாத வழக்கு (UN) என்று முடித்து வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாரி குற்ற வழக்குகளை மீள் பார்வை செய்து சில முக்கிய கோணங்களில் மீண்டும் புலன் விசாரணை செய்யுமாறு அறிவுறுத்தியதின் பேரில் திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய குற்ற எண். 340/2016 பிரிவு 392 இ.த.ச வழக்கின் எதிரி நிர்மல்ராஜ் (எ) அனில் குமார்,(30) என்பவர் மேற்படி ஆதாய கொலை வழக்கில் ஈடுபட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதன் அடிப்படையில் மேற்படி வழக்கை ஊமச்சிக்குளம் உட்கோட்ட, துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சந்திரசேகரன் அவர்கள் மீண்டும் புலன் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு மதுரை மத்திய சிறையில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய குற்ற எண் 1276/2021, பிரிவு 457,380,436,411 இ.த.ச வழக்கில் தண்டனை பெற்று தண்டனை சிறைவாசியாக இருந்து வந்த எதிரி நிர்மல்ராஜ் (எ) அனில்குமார் (30), என்பவரை கடந்த 05.08.23-ம் தேதி இவ்வழக்கிற்காக சம்பிரதாய கைது (Formal Arrest) செய்து, மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற உத்தரவுப்படி 09.08.2023-ம் தேதி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேற்படி வழக்கு தொடர்பாக சாதுரியமாக செயல்பட்டு 8 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஆதாய கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரியை கண்டுபிடித்த ஊமச்சிக்குளம் உட்கோட்ட, துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சந்திரசேகரன் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.சுந்தரபாண்டி ஆகியோர்களை மதுரை பாராட்டியுள்ளார்கள். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்