கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆர்.டி.ஓ செக்போஸ்ட் அருகில் முத்தா என்பவர் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். (25.02.2026) ஆம் தேதி சுமார் மாலை 06.00 மணிக்கு முத்தா கடையில் இருந்த போது அடையாளம் தெரியாத நபர் பாகலூர் பக்கம் இருந்து கருப்பு கலர் புல்லட்டில் வந்து தான் போலீஸ் என கூறி இடுப்பில் போலியான கை துப்பாக்கியுடன் பழைய பேட்டரி, திருட்டுப் பொருட்கள் போன்ற பொருட்கள் ஏதாவது வாங்குகிறீர்களா என்று கேட்டு பின்னர் இரும்பு ராடை எடுத்து பணம் கொடு என்று மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் முத்தா என்பவர் சந்தேகப்பட்டு வீடியோ எடுத்து சத்தம் போடவே உடனே அந்த நபர் அங்கிருந்து கிளம்பி விட்டார். மேற்படி வீடியோ சோசியல் மீடியாவில் பரவி வந்த நிலையில் இது சம்பந்தமாக முத்தா என்பவர் கடந்த (26.02.2026) ஆம் தேதி மாலை சுமார் 03.00 மணிக்கு நல்லூர் காவல் நிலையம் ஆஜராகி தன்னை பணம் கேட்டு மிரட்டிய நபர் மீது கொடுத்த புகாரின் பேரில் நல்லூர் காவல் நிலைய போலீசார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















