தர்மபுரி: ஒவ்வோர் ஆண்டும் நல்லிணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்படுகிறது. அதன்படி தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்கண்காணிப்பாள் திரு.கலைசெல்வன் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில் அலுவலர்கள்,காவல்துறையினர் கலந்து கொண்டு உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வு பூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என அலுவலர்கள் உறுதிமொழியேற்றனர்.
மேலும், அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமலும், பேச்சு வார்த்தைகள் மூலமாகவும், அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் உறுதி அளித்தனர்.