தர்மபுரி : நல்லம்பள்ளி அருகே கொமத்தம்பட்டி, கிராமத்தை சேர்ந்த, லட்சுமிபிரியா (17), இவர் லளிகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 17-ந் தேதி மாணவி லட்சுமிபிரியா விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை பெற்றோர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில், சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மாணவி வேலூரில், உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி லட்சுமிபிரியா, நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து, அதியமான்கோட்டை காவலர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.