மதுரை : மதுரை புதூர் பகுதியில் உள்ள தாமரைத் தொட்டி எதிரில் உள்ள மாற்றுத்
திறனாளிகள் பூங்காவில் பாராசிட்டியின் வாலிபால் அசோசியேசன் சார்பாக சமத்துவ தீபாவளி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டனர். நடைபெற்ற இந்நிகழ்வில், தலைவர் சரவணகுமார் தலைமை உரை நிகழ்த்தினார். செயலாளர் ஈஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்விற்கு ,
சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி, மற்றும் ஜி கிராண்ட் ஹோட்டல் உரிமையாளர் ரொட்டேரியன் டாக்டர் தினேஷ்குமார் ஆகியோர்கள் இணைந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்வில்,
சமூக ஆர்வலர்கள் வசந்தி, முனைவர் அர்சத் முபின், ஆசிரியர் பிரபு மற்றும் பாரா வாலிபால் அசோசியேசன் நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி















