விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தனியார் அறக்கட்டளை (பாலிஸ்பின் பவுண்டேஷன்) சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. ராஜபாளையம் அருகே ஆசிலாபுரம் தனியார் ஆலை வளாகத்தில் பாலிஸ்பின் பவுண்டேசன் சார்பில் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் நலிவடைந்த ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை பாலிஸ்பின் பவுண்டேஷன் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.ராம்ஜி, மற்றும் முதன்மை செயல் அதிகாரி பொன்ராம் ஆகியோர் வழங்கினர். பின்னர், கிழவி குளத்தில் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஆலை முதன்மை நிதி அலுவலர் சீனிவாசவரதன், மனிதவள மேலாளர் ராஜ்குமார், செயலாளர் ஏமராஜன், தொழிற்சங்க தலைவர் ஞான பண்டிதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி















