மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பொன்மலை அடிவாரத்தில் உள்ள அன்பே கடவுள் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்தில் 79 வதுசுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு, பவர் ப்ராஜெக்ட் இயக்குனர் மாணிக்க மூர்த்தி தலைமை தாங்கினார். ஹெல்ப் ஏஜ் இந்தியா கர்ணன், மோகனப்பிரியா, கூட்டுறவு தணிக்கையாளர் கண்ணன், ஆட்டோ தொழிலாளர் பொதுநல சங்க செயலாளர் தென்கரை கௌரிநாதன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். இல்லச் செயலாளர் ஆசைத்தம்பி வரவேற்றார்.
இந்த விழாவில், ஹோமியோபதி டாக்டர் பொன் யாழினி பாலாஜி கொடியேற்றி
நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில், உதவி பேராசிரியர் வழக்கறிஞர் முரளிதரன் சிறப்புரையாற்றினார். முடிவில், இல்லக்காப்பாளர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி