திருநெல்வேலி : திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.பிரவேஷ் குமார், இ.கா.ப, அவர்கள் இன்று திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினரை ஊக்குவிக்கும் வகையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அப்போது தென்காசி மாவட்டத்தில் 8 கொள்ளை சம்பவ வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய உதவியதற்காக சிறப்பாக பணிபுரிந்த உதவி ஆய்வாளர் திரு.சேஷாகிரி, அவர்கள்,தலைமை காவலர்கள் திரு.மோகன்ராஜ், திரு. குமரேசசீனிவாசன், முதல்நிலை காவலர் திரு.சௌந்திர பாண்டியன் , காவலர்கள் திரு.மகேஷ், மற்றும் திரு.லிங்கராஜா ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி ஊக்குவித்தார்.