திண்டுக்கல் : திண்டுக்கல், மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்த சதீஸ்குமார், என்பவர் தொடர்ந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்ததால் நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நிர்வாகத்துறை நடுவர், திண்டுக்கல் மேற்கு அவர்களிடம் ,ஆஜர்படுத்தி நன்னடத்தைக்காக 1 வருட கால பிணைப்பத்திரம் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்கண்ட நபர் மீண்டும் வழிப்பறியில் ஈடுபட்டதால் நிர்வாகத்துறை நடுவர், திண்டுக்கல் மேற்கு அவர்களிடம் ஆஜர்படுத்தி, நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக சதீஸ்குமாருக்கு மீதமுள்ள 340 நாட்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். இவ்வருடத்தில் நன்னடத்தைக்கான பிணைப்பத்திரம் பெறப்பட்டு பிணையை மீறிய குற்றத்திற்காக இதுவரை 23 நபர்களுக்கு, சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.