திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம்,ஆலடியூர் கிராமம் பாடகலிங்கம் என்பவரின் மகன் முத்துசாமி, இவருக்கு வி.கே.புரம் காவல்நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. இந்நிலையில் முத்துசாமியிடம் நிர்வாகதுறை நடுவர் அவர்களால் , 1 வருடத்திற்கான நன்னடத்தை பிணை பெறப்பட்டது.
அதன் பின்பும் முத்துசாமி 11.01.2022 ம் தேதி முன்விரோதம் காரணமாக பெண்ணை ஆயுதத்தை காட்டி மிரட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டது சம்மந்தமாக வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நன்னடத்தை பிணையை மீறி செயல்பட்டதற்காக உதவி ஆய்வாளர் அவர்கள் அம்பாசமுத்திரம் இரண்டாம் வகுப்பு நிர்வாகத்துறை நடுவர் முன்பு அறிக்கை சமர்ப்பித்தார். இதன் மீது விசாரணை நடத்திய நடுவர் அவர்கள் பிணையை மீறி குற்றம் புரிந்ததற்காக முத்துசாமியை 9 மாதங்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.