திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் , அணைத்தலையூர் மறக்குடியை சேர்ந்த மக்கான் @ ஊய்க்காட்டான் சின்னதுரை 54, என்பவர் மீது 26 வழக்குகளும், சீதபற்பநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுக்கன்குறிச்சி சேர்ந்த முத்துக்குட்டி 30. என்பவருக்கு 9 வழக்குகள் உள்ளது.
இந்நிலையில் ஊய்க்காட்டான் சின்னதுரை மற்றும் முத்துக்குட்டியிடம் நிர்வாகத்துறை நடுவர் அவர்களால் 6 மாதத்திற்கான நன்னடத்தை பிணை பெறப்பட்டது . அதன் பின்பும் ஊய்க்காட்டான் சின்னதுரை 13.11.2021 ம் தேதி ஆயுதத்தை காட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டு சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல் முத்துக்குட்டி 04.01.2022ம் தேதி அடிதடியில் ஈடுபட்டது சம்மந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நன்னடத்தை விதியை மீறி இருவரும் செயல்பட்டதற்காக கங்கைகொண்டான் காவல் ஆய்வாளர் திரு.பெருமாள்,அவர்கள் மற்றும் சீதபற்பநல்லூர் உதவி ஆய்வாளர் திரு.உலகுபாண்டியன் அவர்கள் திருநெல்வேலி இரண்டாம் வகுப்பு நிர்வாகத்துறை நடுவர் முன்பு அறிக்கை சமர்ப்பித்தார்கள்.
இதன் மீது விசாரணை நடத்திய நடுவர் அவர்கள் பிணையை மீது குற்றம் புரிந்ததற்காக ஊய்க்காட்டான் சின்னத்துரைக்கு 5 மாதங்கள் சிறை தண்டனை விதித்தும் முத்து குட்டிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.