திருநெல்வேலி: சேரன்மகாதேவி, சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பூர்ணஆனந்த் 27, இவருக்கு சேரன்மகாதேவி காவல்நிலையத்தில் கொலை , கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்கு என மொத்தம் 14 வழக்குகள் உள்ளது.
இந்நிலையில் பூர்ணஆனந்த்திடம் நிர்வாகதுறை நடுவர் அவர்களால் , 1 வருடத்திற்கான நன்னடத்தை பிணை பெறப்பட்டது. அதன் பின்பும் பூர்ணஆனந்த் 06.01.2022 ம் தேதி முன்விரோதம் காரணமாக ஆயுதத்தை காட்டி மிரட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டது சம்மந்தமாக வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நன்னடத்தை பிணையை மீறி செயல்பட்டதற்காக சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர் அவர்கள் இரண்டாம் வகுப்பு நிர்வாகத்துறை நடுவர் முன்பு அறிக்கை சமர்ப்பித்தார். இதன் மீது விசாரணை நடத்திய நடுவர் அவர்கள் பிணையை மீறி குற்றம் புரிந்ததற்காக பூர்ணஆனந்த்க்கு 11 மாதங்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
நன்னடத்தை பிணையை மீறி குற்றம் புரிந்த நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்த சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்,சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.பொன்னுசாமி, அவர்களை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன், இ.கா.ப அவர்கள் வெகுவாக பாராட்டினார்.