திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு காவல் சரகம், பாப்பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், என்பவர் தொடர்ந்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால், தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நிர்வாகத் துறை நடுவர், திண்டுக்கல் மேற்கு அவரிடம் ஆஜர்படுத்தி, நன்னடத்தை ஒரு வருடகால, பிணை பத்திரம் தரப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்கண்ட நபர், மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதால், இன்று (11/05/2022), நிர்வாகத் துறை நடுவர், திண்டுக்கல் மேற்கு அவர்களிடம், ஆஜர்படுத்தி நன்னடத்தை விதியை, மீறிய குற்றத்திற்காக மீதமுள்ள 225 நாட்கள், சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். இவ்வருடத்தில் நன்னடத்தை காண பிணை பத்திரம் பெறப்பட்டு, பிணை மீறிய குற்றத்திற்காக, இதுவரை 27 நபர்களுக்கு, சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.