திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த (16) வயது சிறுமியை நந்தனார்புரத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் மகன் பாண்டியராஜன்(24) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து 5 மாத கர்ப்பிணியாக்கி உள்ளார்.
இதையடுத்து சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்துமேரி தலைமையிலான போலீசார் பாண்டியராஜனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா