திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள, புதுபட்டியில் நண்பர் வீட்டில் திருடிய வாலிபரை நத்தம் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள புதுப்பட்டியைச் சேர்ந்தவர் பஞ்சு. இவரது மகன் தேவேந்திரன் (30). இவர், கடந்த 15-ஆம் தேதி தனது உறவினர் வீட்டில் நடந்த காதணி விழாவிற்கு திருமங்கலம் கரிசல்பட்டியைச் சேர்ந்த தனது நண்பர் ராஜ்குமாரை அழைத்திருந்தார். இதைத்தொடர்ந்து, அங்கு வந்திருந்த ராஜ்குமாரை அழைத்துக் கொண்டு பஞ்சு குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு விசேஷ வீட்டுக்கு சென்றனர். அப்போது தான் ஊருக்கு செல்வதாக கூறி ராஜ்குமார் விசேஷ வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். இந்நிலையில், மாலையில் வீட்டுக்கு தேவேந்திரன் வந்த போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து, நத்தம் காவல் நிலையத்தில் பஞ்சு புகார் செய்தார். புகாரில், ராஜ்குமார் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்ததையடுத்து , நத்தம் போலீசார்கள் ராஜ்குமாரை விசாரணை செய்தனர். இதில் பணம் திருடியது தெரிய வரவே , வழக்கை பதிவு செய்த போலீசார் ராஜ்குமாரை கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி