திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ராமரெட்டிபாளையம் ஏரிக்கரை அருகே மதுபானம் அருந்தியபோது நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் மீஞ்சூரை சேர்ந்த அஜித் 25 என்பவரை கத்தியால் வெட்டி கொலை செய்து கை கால்களை கட்டி முட்புதர் அருகில் உள்ள பாழடைந்த கிணற்றில் போட்டு சென்றுள்ளனர் .
இரண்டு நாட்களாக தன் மகனை காணவில்லை என உறவினர்களுக்கும் அக்கம் பக்கத்திலும் தேடிப் பார்த்த நிலையில் தன் மகனை காணவில்லை என அவரது தந்தை பச்சையப்பன் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் கடந்த 16ஆம் தேதி நண்பர்களுடன் மது அருந்தியதாகவும் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் அவரை அடித்து தலையில் வெட்டியும் கை கால் கட்டி கிணற்றில் போட்டுள்ளதாக வாக்குமூலம் அளித்த நிலையில் நண்பர்களான நாகராஜ் கார்த்திக் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இருவர் அளித்த தகவலின் பேரில் பாழ் அடைந்த கிணற்றிலிருந்து அஜித் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையில் தொடர்புடைய மோகன், சாய், கணேஷ்,வசந்தகுமார், ஆகியோரை மீஞ்சூர் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மூன்று நாட்களாக கொலை செய்யப்பட்டு சடலம் கிணற்றில் இருந்தது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு