திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியில் வசித்து வருபவர் சாய் கிரண் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி சுகன்யா வயது (30). இவர் தினமும் அதிகாலையில் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கம், அதே போன்று நேற்று காலை நடைபயிர்ச்சியில் ஈடுபடும்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த எட்டு தெரு நாய்கள் இவரை வழிமறித்து கடித்ததின் பேரில் பலத்த காயங்கள் ஏற்பட்டு மீஞ்சூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுகன்யாவை கை கால் முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் ஒன்று கூடி கடித்ததில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார், இது குறித்து சுகன்யாவின் கணவர் சாய் கிரண் இப்பகுதியில் திரளான தெருநாய்கள் சுற்றி வருவதாகவும் அவசியம் கட்டுப்படுத்த நாளூர். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு