திண்டுக்கல் : கொடைக்கானல் கவி தியாகராஜர் சாலையில் கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வரும் சபீர்ராஜா தனது கடை முன்பு நின்று திடீரென்று பெட்ரோலை உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். தீ மளமளவென அவர் உடல் மீது பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு, அந்த பகுதியில் கடை வைத்துள்ள வியாபாரிகள் அங்கு ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா