தென்காசி : தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெடுவயல் பகுதியில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் திருமதி. வேல்கனி, அவர்கள் அப்பகுதியில் தொடர்ந்து கண்காணித்தும் ரோந்து பணியில் ஈடுபட்டும் வந்த நிலையில் அங்கு விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நெடுவயல் பகுதியை சேர்ந்த மைதீன் என்பவரின் மகன் அபுபக்கர் (24), மற்றும் அச்சன்புதூர் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சதீஷ் (18), ஆகிய 02 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 25,000 ரூபாய் மதிப்பிலான 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கஞ்சா எப்பகுதியில் இருந்து அவர்களுக்கு கிடைத்தது தொடர்பான விசாரணைகள் மேற்கொண்டு பின்னர் இரண்டு நபர்களும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.