மதுரை: ஜூன்19. சர்வேயர்காலனி வ.உ.சி.தெருவைச்சேர்ந்தவர் புவனேஸ்வரி 31,இவர் மீனாட்சிஅம்மன்நகர்வழியாக நடந்து சென்றார்.அப்போது அந்த வழியாக சென்ற பைக்ஆசாமிகள் புவனேஸ்வரி அணிந்திருந்த இரண்டேகால்பவுன் தங்கசங்கிலியை பறித்துச்சென்றுவிட்டனர்.
இது குறித்து புவனேஸ்வரி கொடுத்தபுகாரில் திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.விசாரணையில் அண்ணாநகரில் வீடுபுகுந்து நகைபறித்த ஆசாமிகள் சென்ற வாகனமும் சர்வேயர் காலனியில் நகைபறித்த ஆசாமிகளும் சென்ற வாகனம் ஒன்றுதான் என்பதும் ஒரே நபர்கள்தான் என்று தெரியவந்தது.அவர்களை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.