திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு விவேகானந்த நகர் பகுதியில் (19.11.2023) ம் தேதி வீட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர் திருடி சென்றார். இது குறித்து வத்தலகுண்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீபின் அறிவுறுத்தலின்படி தனிப்படை காவல்துறையினர் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராஜ் (33). என்பவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் கொள்ளையடித்ததும் கரூர் மற்றும் தேனி மாவட்டங்களில் இவர் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா