குமரி: குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே அழகியபாண்டியபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். முருகனுக்கு திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, அவருடைய மனைவி தங்ககுமாரி அவரை தடிக்காரன்கோணம் பகுதியில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
முருகனுடன் மருத்துவனையில் தங்கியிருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தங்ககுமாரியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை அக்கம் பக்கம் பார்த்து அவரிடம் தெரிவித்துள்ளனர்.
அவர் வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தபோது படுக்கை அறையில் பீரோவில் இருந்த நான்கு சவரன் தங்க நகை மற்றும் 16 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து தங்ககுமாரி பூதப்பாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.