திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த பாண்டியராஜன் (35). என்பவர் (28.04.2025) அன்று தேவர்குளத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டு விட்டு சென்ற பின்பு தனது கைப்பையில் இருந்த தங்கச் செயினை காணவில்லை என தெரிய வந்தது. இது குறித்து பாண்டியராஜன் தேவர்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர், லூக் அசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வரும் மானூர், வடக்கு தெருவை சேர்ந்த முத்துராஜா (35). என்பவர் தங்க செயினை திருடியது தெரிய வந்ததையடுத்து முத்துராஜை (29.04.2025) அன்று கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்