திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் பசுகிடைவிளையை சேர்ந்தவர் ஜோசப் பிரிட்டோ, (62). ஓய்வு பெற்ற ஆசிரியர். (10.10.2024) அன்று ஜோசப் பிரிட்டோ தனது வீட்டில் உள்ள பீரோவை திறந்து பார்த்தபோது அதிலிருந்து ரூபாய் 19 ஆயிரம் பணம், மற்றும் 94 கிராம் தங்க நகைகளை காணவில்லை என தெரிய வந்தது. இது குறித்து அவர் வி.கே.புரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர், சிவா விசாரணை மேற்கொண்டு அதே பகுதியை சேர்ந்த சூர்யா(26). மற்றும் கோட்டைவிளைபட்டியை சேர்ந்த சுரேஷ் (24). ஆகியோரை (19.11.2024) கைது செய்து அவர்களிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்