திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை சேர்ந்தவர் கணேஷ்பாண்டி (34). இவர் போலீஸ் நிலையம் அருகே கோல்டு, கவரிங் நகைக்கடை வைத்துள்ளார். தற்போது தீபாவளி சீசன் என்பதால் கடையில் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி 3 பெண்கள் கவரிங் நகைகளை திருடி மறைத்து வைத்ததை கண்டுபிடித்த கணேஷ்பாண்டி நிலக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் விசாரணையில் அந்த பெண்கள் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராக்கம்மாள் (60).விஜயா (58).நதியா (38). என தெரியவந்தது. 3 பெண்களையும் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் கைது செய்து விசாரணை நடத்தினார். அதில் அவர்கள் மீது மதுரை, திண்டுக்கல், தேனி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கவரிங் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா