திண்டுக்கல்: திண்டுக்கல் கொடைக்கானல் அண்ணா நகரை சேர்ந்த சுப்பிரமணி மகன் கணேசன் என்பவரின் வீட்டின் பூட்டை கடந்த 17ஆம் தேதி உடைத்து மர்ம நபர் 7 பவுன் தங்க நகை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கணேசன் உறவினர் விக்னேஷ்(37). என்பவர் திருடி அதனை பைனான்ஸ் அடகு கடையில் வைத்து பணம் பெற்றது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் விக்னேஷை கைது செய்து பைனான்ஸ் நிறுவனத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா