சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, பிள்ளையார்பட்டி, கோட்டையூர், குன்றக்குடி உட்பட பல்வேறு பகுதிகளிலும் நடந்த கோயில் திருவிழாவின் போது தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. நடைபெற்ற செயின் சம்பவங்கள் குறித்து குன்றக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கண்காணிப்பு கேமராக்களின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் பழனிகுமார் தலைமையில் காவல்துறையினர் தேடிவந்த நிலையில் இதில் ஈடுபட்டது கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் மனைவி முத்தழகு( 36). முருகன் மனைவி அலமேலு( 55). என தெரியவந்தது. அலமேலு விபத்து ஒன்றில் சிக்கி இறந்த நிலையில், முத்தழகை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 28 பவுன் நகையை காவல்துறையினர் மீட்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி