திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் ஆர்த்தி தியேட்டர் ரோட்டில் உள்ள மயூரி அரோமா பியூட்டி பார்லர் கடையில் உரிமையாளர் நோபல் ஜெர்மன்மேரி என்பவரிடம் ஆசை வார்த்தை கூறி நூதன முறையில் பெண் ஒருவர் 6 பவுன் நகையை திருடி சென்றது. தொடர்பாக வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து மாவட்ட எஸ்.பி.பிரதீப் உத்தரவின்படி, ஏ.எஸ்.பி.சிபின் மேற்பார்வையில் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர். கண்ணன் தலைமையில் சார்பு ஆய்வாளர் சித்திக், நகர் குற்றதடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட டெய்சி(40). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 6 பவுன் நகையை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா