கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையத்தில் கடந்த (06.02.25) ஆம் தேதி மாலை 16.30 மணியளவில் தெய்வானை என்பவர் சூளகிரி அருகில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டிற்கு சென்று மீண்டும் ஓசூர் பேருந்து நிலையம் திரும்பி வந்தபோது தன் கட்டை பையில் வைத்திருந்த சுமார் 4 சவரன் மதிப்புடைய தங்க நகைகள் திருடு போயுள்ளது. இது சம்பந்தமாக (24.02.2025) ஆம் தேதி ஓசூர் டவுன் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து திருடிய நபரை கைது செய்து குற்றவாளியிடமிருந்து சுமார் 4 பவுன் நகையை பறிமுதல் செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்