தர்மபுரி : தர்மபுரி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதிபுரம் குமரபுரி பகுதியில் கடந்த (04.11.2023) ம் தேதி இரவு சிவராமகிருஷ்ணன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து சுமார் 58 3/4 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டது. மேலும் தொடர்ச்சியாக 18.11.2023 ம் தேதி அதியமான் கோட்டை காவல் நிலைய பகுதியில் சுமார் 12 சவரன் தங்க நகைகளும், சேலம் மாவட்டம் சூரமங்கலம் காவல் நிலைய எல்லைப்பகுதியில் சுமார் 14 சவரன் தங்க நகைகளும் என மொத்தம் 84 3/4 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக சம்பவயிடத்தை தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பார்வையிட்டு அவர்கள் உத்தரவுபடி தர்மபுரி உட்கோட்டதுணை காவல் கண்காணிப்பாளர் திரு. செந்தில்குமார் அவர்களின் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திரு.ரங்கசாமி, காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.விஜயசங்கர், திரு.சென்றாயன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தர்மபுரி சேலம், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் சுமார் 300 க்கும் மேற்பட்ட CCTV பதிவுகளை ஆய்வு செய்து ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராயப்பாடி வெங்கையா, வயது (47). த/பெ. புட்சையா, என்பவரை (13.12.2023_) ம் தேதி கைது செய்து அவரிடமிருந்து சுமார்80 3/4 சவரன் தங்க நகைகள் (சுமார் 32 லட்சம்) கைப்பற்றப்பட்டது. மேலும் வழக்கில் சம்பந்தப்பட்ட TATA HEXA கார் ஒன்றும் Honda Activa இருசக்கர வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.