கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் ரமேஷ் என்பவர் தன் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக இருவீட்டாரும் அந்திவாடி அருகில் உள்ள GVR சௌபாக்கியா திருமண மண்டபத்தில் (20.01.2024) ஆம் தேதி பகல் சுமார் 12.00 மணி அளவில் திருமண மண்டபத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மாப்பிள்ளைக்கு போட வேண்டிய ஏழு பவுன் நகையை ரமேஷ் ரூமில் உள்ள சூட்கேசில் வைத்து பூட்டி விட்டு இரவு சுமார் 9.30 மணிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடித்துவிட்டு வந்து பார்த்தபோது நகை வைத்திருந்த சூட்கேஸ் உடைக்கப்பட்டு நகை திருடு போய்விட்டதாக (04.02.2024) ஆம் தேதி ரமேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து நகை திருடிய நபரை கைது செய்து அவரிடமிருந்து திருடிய ஏழு பவுன் நகையை பறிமுதல் செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்