திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள பழனி சாலையில் இருக்கும் கே.டி. மருத்துவமனை எதிர்புறம் நைனார் முகமது தெரு பகுதியைச் சேர்ந்த சவரிமுத்து என்பவர் வீட்டில் கடந்த மாதம் 3-ம் தேதி 47 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தொடர்பாக தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து எஸ்.பி பிரதீப் உத்தரவின்படி புறநகர் டிஎஸ்பி சிபி சாய் சௌந்தர்யன் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சிவகங்கையை சேர்ந்த அஜித் (எ) அஜித்குமார்(25). ஆதிஸ்வரன்(29). ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து நகையை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா