சிவகங்கை: சிவகங்கை மாவட்டம்காரைக்குடி உட்கோட்டம் குன்றக்குடி காவல் நிலையத்திற்குட்பட்ட கோவிலூர் ரோட்டில் கடந்த (27.02.25) அன்று கண்டதேவி கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவரிடம் அடையாளம் தெரியாத இரு நபர்கள் 1 பவுன் தங்க நகையை மிரட்டி பறித்துச் சென்றது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக சார்பு ஆய்வாளர் பிரேம்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில், மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட கோவிலூரைச் சேர்ந்த சுரேஷ் (30). மற்றும் நாச்சியாபுரத்தைச் சேர்ந்த அழகேஷ்(27). ஆகியோர் கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து நகை மீட்கப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி