திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நரிப்பட்டியை சேர்ந்த முருகேசன்(85). கடந்த 19-ம் தேதிவீட்டில் தனியாக இருந்த முருகேசனிடம் பல்லடம் பகுதியை சேர்ந்த பிரியா(35). தான் ஒரு அரசு அலுவலர் எனவும் அரசின் உதவித்தொகை பெற்று தருவதாக கூறிஆதார் கார்டை கேட்டுள்ளார். முருகேசன் நடக்க முடியாமல் இருந்ததால் பீரோவில் இருப்பதாக தெரிவித்தார். பீரோவில் இருந்த ஆதார் கார்டை எடுத்துக் கொண்ட பிரியா, அங்கு வைக்கப்பட்டிருந்த 6 பவுன் நகைகளை திருடி சென்றார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பல்லடத்தில் பதுங்கி இருந்த பிரியாவை கைது செய்தனர்.\
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















