கன்னியாகுமரி : குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வாங்கி தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் கடந்த (23.04.1999) ம் தேதியன்று இரவு நேரத்தில் அழகன்பாறை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின் லாக்கரை உடைத்து நகைகளை திருடி சென்றதாக மண்டைக்காடு காவல் நிலையத்தில் வந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த திருட்டில் சம்மந்தப்பட்ட 11 குற்றவாளிகள் அடையாளம் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
அந்த வழக்கு விசாரணையானது இரணியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இத்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளான அழகன்பாறை பகுதியை சேர்ந்த பொன்னையன் என்பவரின் மகன் ஆறுமுகம் (எ) விஜயன்(75). கொம்பன்விளை பகுதியை சேர்ந்த பொன்னையா என்பவரின் மகன் பச்சைமால்(64). கோவில்விளை பகுதியை சேர்ந்த செல்வநாயகம் என்பவரின் மகன் ஜெயச்சந்திரன் (எ) சுப்பிரமணியன்(57). அழகன்பாறை பகுதியை சேர்ந்த செல்லப்பன் என்பவரின் மகன் அருள் ராஜன்(52). அழகன்பாறை பகுதியை சேர்ந்த பெரஜதாஸ் என்பவரின் மகன் ராஜேஷ் (57). மண்டைக்காடு பகுதியை சேர்ந்த மதுரம் என்பவரின் மகன் ஸ்டார்வின்ராஜ்(50). ஆகியோருக்கு ஆறு ஆண்டுகள் சிறையும் 10,000/- ரூபாய் அபராதமும் மற்றும் குளச்சல் பகுதியை சேர்ந்த ரெங்கசாமி என்பவரின் மகன் செந்தில்(55). என்பவருக்கு மூன்று ஆண்டுகள் சிறையும் 10,000/- ரூபாய் அபராதமும் விதித்து இரணியல் நீதித்துறை நடுவர் திரு.அம்ருதீன் அவர்கள் தீர்ப்பளித்தார்.
குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் தீவிரமாக செயல்பட்ட கூடுதல் பொது வழக்கறிஞர் திருமதி.செல்வி, முன்னாள் விசாரணை அதிகாரி ஆய்வாளர் திரு.தாமஸ் அந்தோணி ராஜ், தற்போதைய விசாரணை அதிகாரி ஆய்வாளர் திருமதி.ஜெயலட்சுமி மற்றும் நீதிமன்ற அலுவல் புரியும் பெண் தலைமை காவலர் திருமதி.நித்யா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
















