கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை சாலையில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதியில் சிற்பி சடையப்பன் (46). இவரது வீட்டில் கடந்த மாதம் 15-ஆம் தேதி அன்று 15 பவுன் நகைகள், வெள்ளி விளக்குகள், பணம் திருடு போனது. இந்தச் சம்பவம் குறித்து ஓசூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அங்குள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது 3 பேர் டூவீலரில் வந்து சென்றது தெரியவந்தது. அவர்கள் சேலம், கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த ராட்டினம் சுற்றும் தொழிலாளி பிரபு (48). ஒசூரைச் சேர்ந்த ஓட்டுநர் பிரவீண்குமார் (43). ஊத்தங்கரை அடுத்த வீரகுப்பத்தைச் சேர்ந்த கட்டத் தொழிலாளி தமிழரசு (32). என்பது தெரிய வந்தது. மேலும் திருடிய தங்க நகைகளை போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக தங்கக் காசுகளாக மாற்றி வைத்திருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்