திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன.
இந்த சம்பவங்கள் குறித்து, நகர் வடக்கு, நகர் தெற்கு, அம்பாத்துரை ஆகிய காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், உத்தரவின் பேரில், திண்டுக்கல் நகர் டி.எஸ்.பி. கோகுல கிருஷ்ணன் மேற்பார்வையில், திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் நகர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரான சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் மற்றும் காவலர்கள் ராதாகிருஷ்ணன், முகமது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் புறநகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் காவலர்கள் உதயசூரியன், மாணிக்கவாசகம் ஆகியோர் இணைந்து CCTV காவலர்கள் ஜான் மற்றும் செல்வி சைபர் கிரைம் காவலர்கள் மணிகண்டன் மற்றும் சக்திவேல் ஆகியோர் உதவியுடன் திண்டுக்கல்லில் இருந்து மதுரை வரை பல்வேறு CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், கிடைத்த புகைப்படத்தின் மூலமாக விசாரணை மேற்கொண்டு திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட அலெக்ஸ் பாண்டி என்ற காக்காமுட்டை(21), மதுரை, சதீஷ்(25),ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 10 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 டூவீலர்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி